வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
மனித வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சி. அது ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபடுகிறது. சிலருக்கு பொருட்கள் வாங்குவதில் ஆசை, சிலருக்கு கனவுகளை உருவாக்குவதில் ஆசை, சிலருக்கு விரும்பியதை செய்வதற்கு ஆசை. ஆசை ஒவ்வொரு மனிதரிடமும் வேறுபட்டு உள்ளது. ஆசை எதுவாயினும் அதன் குறிக்கோள் மகிழ்ச்சி மட்டுமே. மகிழ்ச்சி நமக்குள் இருப்பதை மறந்து நம் வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கை மகிழ்ச்சியை மட்டும் சார்ந்தது அல்ல. சோகம், குற்ற உணர்வு, கவலை, கோபம், போராட்டங்கள், விரக்தி என அனைத்து வகையான சுவைகளும் அடங்கியது தான் வாழ்க்கை. ஒவ்வொருவரின் குழந்தை பருவமும் மகிழ்ச்சியாகத்தான் நிச்சயம் இருந்திருக்கும். மனிதன் பிறக்கும்போது அறியாமையுடன் பிறக்கிறான். பிறகு வளரவளர தான் வாழ்வின் மற்ற சுவைகளை உணர தொடங்குகிறார். மற்ற சுவைகளை சுவைத்ததனாலோ என்னவோ மகிழ்ச்சி என்ற இனிப்பு அவனுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. தேனை மட்டும் சுவைத்துக் கொண்டிருந்தால் திகட்டி விடும். மற்ற சுவைகளை நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே தேனின் இனிமையை உங்களால் உணர முடியும். அப்படி நீங்கள் ஒரே சுவையை மீண்டும் மீண...