இடுகைகள்

உன்னை நேசி

 நம்மை நாம் நேசிப்பது மிகவும் அவசியமான ஒன்று. நம்மை தொலைத்து வெளியே தேடுவதன் விளைவு தான் விரக்தி, வெறுப்பு போன்றவைகளுக்கு காரணமாக அமைகிறது. நமக்குள் இருக்கும் நண்பன் ஒரு போதும் நம்மை ஏமாற்றம் செய்யமாட்டான். அவனுக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியும். அவனைப் புரிந்து கொள்ள தொடங்கினாலே, எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி பேச தொடங்குங்கள். நிச்சயம் ஒரு வழி கிடைக்கும். முதலில் சிரமமாக இருந்தாலும் முடிவு நிச்சயம் நன்றாகத் தான் இருக்கும். அவன் நிச்சயம் ஒரு நல்ல தோழனாக இருப்பான். மற்றவர்களைப் போல் பாதியில் விட்டு செல்லமாட்டான். உங்களது நட்பு பிறப்பு முதல் இறப்பு வரை தொடரக்கூடிய ஒன்று. இப்படி ஒரு அற்புதமான உறவை கடவுள் நம்முடனே படைத்துள்ளார் நமது பாதுகாப்பிற்காக, ஆனால் நாம் இதை எப்பொழுதும் உணர்வதே இல்லை. இவனுடன் உரையாடல் தொடர கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் தவறில்லை. உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்மை ஒரு ராஜாவாகவும் ஒரு ராணியாகவும் வைத்திருக்க இவனால் முடியும். 

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

படம்
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? மகிழ்ச்சியாக இருப்பது கடினமான ஒன்றா? ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் மகிழ்ச்சியை அடைவதற்கு முயல்கிறான். உதாரணமாக, பிறரிடம் அன்பு செலுத்துவது, பணம் சேகரிப்பது, பொருட்கள் வாங்குவது இதுபோன்ற அனைத்தின் இறுதிக் குறிக்கோள் மகிழ்ச்சி மட்டுமே . ஆகவே மனித வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியை அடைவது. மகிழ்ச்சியை அடைவதற்கு தான் இத்தனை பாடுபடுகிறான் மனிதன். சரி, மகிழ்ச்சி எங்கு தான் உள்ளது? மகிழ்ச்சி நம்மை சுற்றி இருப்பவரை சார்ந்ததா? மகிழ்ச்சி மனதில் மலர்வது. மகிழ்ச்சி நம்மை சுற்றி இருப்பவரை சார்ந்தது அல்ல நம்மை சார்ந்தது. நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு அத்தியாவசியமான ஒன்று. சிலர் மகிழ்ச்சியை பணம் சார்ந்த விஷயமாக பார்க்கிறார்கள். பணம் நமது தேவைகளை நிவர்த்தி செய்யவே தவிர நமது மனதை நிவர்த்தி செய்யாது. செல்வந்தர் இடமும் சோகம் இருக்கத்தான் செய்கிறது, அதேசமயம் ஏழையிடமும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.       மகிழ்ச்சி மனநிலை சார்ந்தது. அது தனக்குள் இருப்பதை அறியாமல் வெளியே தேடி அலைகிறான் மனிதன். செல்வம் வந்தால் மகிழ்ச்சி வந்து வி...

ஜானலிங் செய்வது எப்படி?

படம்
இதற்கு முன்னதாக ஜானலிங் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஜானலிங் என்றால் என்ன? தினமும் ஜானலிங் எழுதுவதன் மூலம் நமது ஆளுமை பண்பு மேம்படுகிறது. ஜானலிங் என்பது டைரி எழுதுவதிலிருந்து சற்று வித்தியாசமானது. ஏனெனில் டைரி நாம் என்ன நடந்தது என்பதை குறிப்பிடுவதற்காக உபயோகப்படுத்துவது. ஆனால் ஜானலிங் என்பது என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு உபயோகப்படுத்துவது.  எடுத்துக்காட்டாக கூறினால் ஒரு செயல் நடந்து முடிந்த பின்பு அதிலிருந்து, நாம் என்ன கற்றுக்கொண்டோம், என்ன தவறு செய்தோம், அதை எப்படி சரி செய்து கொள்வது, என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்தப்படுவதை தான் ஜானல்.  தினமும் நடந்த அனுபவங்களை எழுதுவதன் மூலம் நம்மால் புதிய ஒரு பரிணாமத்தை உணர்ந்து கொள்ள முடியும். நாளுக்கு நாள் நம்மை அது புத்திசாலியாக மாற்றும் மற்றும் மீண்டும் இதேபோன்ற செயல் நடைபெறும் பொழுது நம்மால் தப்பித்துக் கொள்வதற்கான செயல்முறையை யோசிக்க இயலும். நாம் என்ன தவறு செய்கிறோம், நமது திறமைகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு சுய மதிப்பீடு செய்வதற்கு உதவுவதுதான் ஜானல். ஜானல் எழுதுவதின் பயன்கள்? #ஜானல் எழுதுவதின் மூலம் நம்மால் நம்மு...

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

படம்
மனித வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சி. அது ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபடுகிறது. சிலருக்கு பொருட்கள் வாங்குவதில் ஆசை, சிலருக்கு கனவுகளை உருவாக்குவதில் ஆசை, சிலருக்கு விரும்பியதை செய்வதற்கு ஆசை. ஆசை ஒவ்வொரு மனிதரிடமும் வேறுபட்டு உள்ளது. ஆசை எதுவாயினும் அதன் குறிக்கோள் மகிழ்ச்சி மட்டுமே.  மகிழ்ச்சி நமக்குள் இருப்பதை மறந்து நம் வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கை மகிழ்ச்சியை மட்டும் சார்ந்தது அல்ல. சோகம், குற்ற உணர்வு, கவலை, கோபம், போராட்டங்கள், விரக்தி என அனைத்து வகையான சுவைகளும் அடங்கியது தான் வாழ்க்கை.     ஒவ்வொருவரின் குழந்தை பருவமும் மகிழ்ச்சியாகத்தான் நிச்சயம் இருந்திருக்கும். மனிதன் பிறக்கும்போது அறியாமையுடன் பிறக்கிறான். பிறகு வளரவளர தான் வாழ்வின் மற்ற சுவைகளை உணர தொடங்குகிறார். மற்ற சுவைகளை சுவைத்ததனாலோ என்னவோ மகிழ்ச்சி என்ற இனிப்பு அவனுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.   தேனை மட்டும் சுவைத்துக் கொண்டிருந்தால் திகட்டி விடும். மற்ற சுவைகளை நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே தேனின் இனிமையை உங்களால் உணர முடியும். அப்படி நீங்கள் ஒரே சுவையை மீண்டும் மீண...