ஜானலிங் செய்வது எப்படி?



இதற்கு முன்னதாக ஜானலிங் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஜானலிங் என்றால் என்ன?

தினமும் ஜானலிங் எழுதுவதன் மூலம் நமது ஆளுமை பண்பு மேம்படுகிறது. ஜானலிங் என்பது டைரி எழுதுவதிலிருந்து சற்று வித்தியாசமானது. ஏனெனில் டைரி நாம் என்ன நடந்தது என்பதை குறிப்பிடுவதற்காக உபயோகப்படுத்துவது. ஆனால் ஜானலிங் என்பது என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு உபயோகப்படுத்துவது. 

எடுத்துக்காட்டாக கூறினால் ஒரு செயல் நடந்து முடிந்த பின்பு அதிலிருந்து, நாம் என்ன கற்றுக்கொண்டோம், என்ன தவறு செய்தோம், அதை எப்படி சரி செய்து கொள்வது, என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்தப்படுவதை தான் ஜானல். 

தினமும் நடந்த அனுபவங்களை எழுதுவதன் மூலம் நம்மால் புதிய ஒரு பரிணாமத்தை உணர்ந்து கொள்ள முடியும். நாளுக்கு நாள் நம்மை அது புத்திசாலியாக மாற்றும் மற்றும் மீண்டும் இதேபோன்ற செயல் நடைபெறும் பொழுது நம்மால் தப்பித்துக் கொள்வதற்கான செயல்முறையை யோசிக்க இயலும். நாம் என்ன தவறு செய்கிறோம், நமது திறமைகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு சுய மதிப்பீடு செய்வதற்கு உதவுவதுதான் ஜானல்.

ஜானல் எழுதுவதின் பயன்கள்?

#ஜானல் எழுதுவதின் மூலம் நம்மால் நம்முடன் உரையாடிக் கொள்ள முடியும். 

#ஜானல் ஒரு சிறந்த நண்பன்.

#நமக்குள் ஆழ்ந்த சிந்தனை திறனை மேம்படுத்தும்.

#சரியான சிந்தனையையும் சரியான வாழ்க்கைப் பாதையும் அமைப்பதற்கு உதவியாக இருக்கும்.

#உங்கள் வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கு உதவும்.

#தவறுகளை சரிசய்து
 சரியான பாதையை உருவாக்குவதற்கான ஒரு கலம்.

#தெளிவான சிந்தனையை மற்றும் தெளிவான பார்வையையும் உருவாக்கும்.

 ஜானல் எழுதத் தொடங்குவதற்கு முன் உமக்குப் பிடித்த குறிப்பு புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள் அது சற்று மற்றவற்றிலிருந்து வித்தியாசமானதாக இருத்தல் வேண்டும். அதேபோல் உமக்குப் பிடித்த வசதியான பேனா எடுத்துக்கொள்ளுங்கள். சாதாரண பேனா பேப்பர் தானே எதற்காக இதை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைப்பீர்கள். நாம் செய்யும் சிறு சிறு செயல்கள் ஜானல் எழுத தூண்ட உதவும். நமக்கு அந்த குறிப்பு புத்தகம் பிடிக்கும் என்பதற்காக கூட நம் ஜோனஸ் எழுத ஆரம்பிப்போம்.

 தினமும் ஒரு 15 நிமிடம் ஜானல் எழுதுவதின் மூலம் நம்மால் ஒரு புதிய பார்வையை உருவாக்க முடியும். உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு சிறிய முயற்சி உங்கள் வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஜானல் எழுத தொடங்கிய குறைந்தபட்ச நாட்களிலேயே உம்மால் மாற்றத்தை உணர முடியும். 
                                                 - Myma


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை நேசி

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?