மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
மகிழ்ச்சியாக இருப்பது கடினமான ஒன்றா?
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் மகிழ்ச்சியை அடைவதற்கு முயல்கிறான். உதாரணமாக, பிறரிடம் அன்பு செலுத்துவது, பணம் சேகரிப்பது, பொருட்கள் வாங்குவது இதுபோன்ற அனைத்தின் இறுதிக் குறிக்கோள் மகிழ்ச்சி மட்டுமே . ஆகவே மனித வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியை அடைவது. மகிழ்ச்சியை அடைவதற்கு தான் இத்தனை பாடுபடுகிறான் மனிதன். சரி, மகிழ்ச்சி எங்கு தான் உள்ளது? மகிழ்ச்சி நம்மை சுற்றி இருப்பவரை சார்ந்ததா?
மகிழ்ச்சி மனதில் மலர்வது. மகிழ்ச்சி நம்மை சுற்றி இருப்பவரை சார்ந்தது அல்ல நம்மை சார்ந்தது. நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு அத்தியாவசியமான ஒன்று. சிலர் மகிழ்ச்சியை பணம் சார்ந்த விஷயமாக பார்க்கிறார்கள். பணம் நமது தேவைகளை நிவர்த்தி செய்யவே தவிர நமது மனதை நிவர்த்தி செய்யாது. செல்வந்தர் இடமும் சோகம் இருக்கத்தான் செய்கிறது, அதேசமயம் ஏழையிடமும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
மகிழ்ச்சி மனநிலை சார்ந்தது. அது தனக்குள் இருப்பதை அறியாமல் வெளியே தேடி அலைகிறான் மனிதன். செல்வம் வந்தால் மகிழ்ச்சி வந்து விடும், நினைத்ததை அடைந்தால் மகிழ்ச்சி வந்துவிடும், வேலை கிடைத்தால் மகிழ்ச்சி வந்து விடும், என மகிழ்ச்சியை ஒவ்வொன்றிலும் தேடி அலைகிறான். முதியவர், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரை விட குழந்தை அதிக மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? காரணம், குழந்தையிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை, தன் நினைத்ததை அடைந்த பிறகுதான் மகிழ்ச்சி என்ற ஒரு எந்த மனப்பாங்கும் இல்லை ஆகவே குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றவர்கள் தான் நினைத்ததை செய்தால்தான் மகிழ்ச்சி என்ற மனப்பாங்கில் உள்ளனர். எனவேதான் மகிழ்ச்சி அரிதான செயலாக உள்ளது.
நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்:
••• பிறருக்காக பணம் செலவு செய்யுங்கள்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி பிறரது தேவைகளை பூர்த்தி செய்வது. பரிசு பொருட்கள் வாங்கி தருவது. நம்முள் மகிழ்ச்சியை மலரச் செய்யும்.
••• தியானம் செய்து பழகுங்கள்
தினமும் தியானம் செய்வதால் மனம் அமைதி பெறும் ஒரு தெளிவு கிடைக்கும். தெளிவான மனப்போக்கு நமக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நம் மகிழ்ச்சியற்ற நிலைமைக்கு காரணம் நமது எண்ணங்கள் தான். நமது எண்ணங்களை நாம் அறியும் பட்சத்தில் நமக்கு உண்மை புலப்படும். இதற்கு தியானம் சிறந்த ஒன்றாகும்.
••• காப்பி அருந்துங்கள்
2016ல் ஒரு ஆராய்ச்சிிியின் படி,
ஒருபடி காப்பி மனிதனின் 8 சதவீத மன சோர்வை நீக்குகிறது. ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்லம்மட்ரி அமிலங்கள் நம்மில் டோபமின் என்ற அமிலத்தை சுரக்கச் செய்கிறது. இந்த டோபமின் அமிலத்தின் சுரப்பு தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம்.
••• சிறிய நடை பயணத்தை மேற்கொள்ளுங்கள்
சிறிய நடை பயணத்தை மேற் கொள்வதன் மூலம் நம்மால் புதுமையை உணர இயலும். புதிய காற்று புதுமையான விஷயங்கள் மூலம் நமது மனம் அமைதி பெறும்.
•••நண்பரிடம் உரையாடுங்கள்
நண்பரிடம் உரையாடுவது மூலம் நமது சோர்வுு நீங்கி புத்துணர்வு பெரும்.
•••சோகப் பாடல்கள் கேளுங்கள்
சோகமாக இருக்கும் பொழுதுுுு சந்தோஷமான பாடல்களை கேட்பதை விட சோகமான பாடல் களை கேட்பதன் மூலம் நமது மனம் மகிழ்ச்சி பெறும். சோகப்்பாடல்கள் நமது கெட்ட மனநிலையை சரிி செய்து நல்ல மனநிலைக்கு வர உதவும்.
••• ஜானல் எழுதுங்கள்
ஜானல் எழுதுவது ஒரு நண்பரிடம் உரையாடுவது போன்றது. இதில் நமது உணர்வுகளை எழுதுவதன் மூலம் நமது சுகத்திற்கான காரணத்தை அறிந்து மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்கான யுத்திகளை அறிய இயலும்.
ஜானல் பற்றி மேலும் அறிய
கருத்துகள்
கருத்துரையிடுக