வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
மனித வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சி. அது ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபடுகிறது. சிலருக்கு பொருட்கள் வாங்குவதில் ஆசை, சிலருக்கு கனவுகளை உருவாக்குவதில் ஆசை, சிலருக்கு விரும்பியதை செய்வதற்கு ஆசை. ஆசை ஒவ்வொரு மனிதரிடமும் வேறுபட்டு உள்ளது. ஆசை எதுவாயினும் அதன் குறிக்கோள் மகிழ்ச்சி மட்டுமே.
மகிழ்ச்சி நமக்குள் இருப்பதை மறந்து நம் வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கை மகிழ்ச்சியை மட்டும் சார்ந்தது அல்ல. சோகம், குற்ற உணர்வு, கவலை, கோபம், போராட்டங்கள், விரக்தி என அனைத்து வகையான சுவைகளும் அடங்கியது தான் வாழ்க்கை.
ஒவ்வொருவரின் குழந்தை பருவமும் மகிழ்ச்சியாகத்தான் நிச்சயம் இருந்திருக்கும். மனிதன் பிறக்கும்போது அறியாமையுடன் பிறக்கிறான். பிறகு வளரவளர தான் வாழ்வின் மற்ற சுவைகளை உணர தொடங்குகிறார். மற்ற சுவைகளை சுவைத்ததனாலோ என்னவோ மகிழ்ச்சி என்ற இனிப்பு அவனுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
தேனை மட்டும் சுவைத்துக் கொண்டிருந்தால் திகட்டி விடும். மற்ற சுவைகளை நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே தேனின் இனிமையை உங்களால் உணர முடியும். அப்படி நீங்கள் ஒரே சுவையை மீண்டும் மீண்டும் சுவைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையோ தவற விடுகிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது.
ஒருவன் சிறுவயதிலிருந்தே எந்த ஒரு பிரச்சனையிலும் மூழ்காமல் தன்னை தகர்த்துக் கொண்டே வருகிறான்வருகிறான் என்றால் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திறமைகளை அவன் வளர்த்துக் கொள்ளாமல் இருக்கிறான் என்று அர்த்தம். பிரட்சனை இல்லா மனிதனை இவ்வுலகில் பார்க்க இயலாது .நம் வாழ்க்கைக்கு இசைந்து கொடுக்க வில்லை எனில், வாழ்க்கை நமக்கு இசைந்து கொடுக்காது.
வாழ்க்கை நமக்கு பாடங்களைக் கற்பித்து கொண்டே இருக்கும். விவேகானந்தர் கூறுகிறார், வாழ்க்கை நமக்கு சட்ட பாடத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் நாம் கற்பிக்க மறுத்தாலும் கூட.
இவை அனைத்தும் நம் வாழ்வின் ஒரு அங்கம். அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரே வழி ஏற்றுக்கொள்வதும் கடந்து செல்வதும் தான். உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்பொழுது அதை தீர்க்க முயற்சி செய்தாலே போதும் மகிழ்ச்சி உங்களை தேடி வரும். தீர்க்க முடியாதவைகளை அப்படியே விட்டு விடுங்கள்.
தெளிவு நிச்சயம் திருப்தியை அளிக்கும். புரிதல்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்ற வழியை உங்களுக்கு காட்டும். அதனால் முதலில் நான் யார் என்பதனை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்கு எது தேவை? எது தேவையற்றது? எது பிடிக்கும்? எது பிடிக்காது? நான் யார்? எனது குறிக்கோள் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்யுங்கள். இதில் ஏற்படும் தெளிவும் அறிவும் உங்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும்.
நன்றி!!!!
(தொடரும்)

கருத்துகள்
கருத்துரையிடுக