மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? மகிழ்ச்சியாக இருப்பது கடினமான ஒன்றா? ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் மகிழ்ச்சியை அடைவதற்கு முயல்கிறான். உதாரணமாக, பிறரிடம் அன்பு செலுத்துவது, பணம் சேகரிப்பது, பொருட்கள் வாங்குவது இதுபோன்ற அனைத்தின் இறுதிக் குறிக்கோள் மகிழ்ச்சி மட்டுமே . ஆகவே மனித வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியை அடைவது. மகிழ்ச்சியை அடைவதற்கு தான் இத்தனை பாடுபடுகிறான் மனிதன். சரி, மகிழ்ச்சி எங்கு தான் உள்ளது? மகிழ்ச்சி நம்மை சுற்றி இருப்பவரை சார்ந்ததா? மகிழ்ச்சி மனதில் மலர்வது. மகிழ்ச்சி நம்மை சுற்றி இருப்பவரை சார்ந்தது அல்ல நம்மை சார்ந்தது. நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு அத்தியாவசியமான ஒன்று. சிலர் மகிழ்ச்சியை பணம் சார்ந்த விஷயமாக பார்க்கிறார்கள். பணம் நமது தேவைகளை நிவர்த்தி செய்யவே தவிர நமது மனதை நிவர்த்தி செய்யாது. செல்வந்தர் இடமும் சோகம் இருக்கத்தான் செய்கிறது, அதேசமயம் ஏழையிடமும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மகிழ்ச்சி மனநிலை சார்ந்தது. அது தனக்குள் இருப்பதை அறியாமல் வெளியே தேடி அலைகிறான் மனிதன். செல்வம் வந்தால் மகிழ்ச்சி வந்து வி...